சிறு உதவிகளால் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தனிநபர்களுக்கு Silent Heroes விருது

சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்குச் சான்றாக, சிறு உதவிகளைச் செய்து சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர் சிலர்.

அவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஹில்வியூ சிவிலியன்ஸ் விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் “Silent Heroes” விருது நிகழ்ச்சி இந்த ஆண்டு ஐந்தாம் முறையாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும்.

குடும்பங்கள், சமூகங்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் தனிநபர்களுக்கு அந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதற்கான நியமனங்கள் சென்ற மாதம் தொடங்கியது. நான்கு பிரிவுகளில் நியமனங்கள் வரவேற்கப்படுகின்றன.

அது பற்றிய மேல் விவரங்களைப் பெறவும் நியமனங்களைச் சமர்ப்பிக்கவும் www.sgsilentheroes.com இணையத்தளத்திற்குச் செல்லவும்.

நியமனங்களைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: ஜூலை மாதம் 15 ஆம் தேதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*